உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் போதை மாத்திரை பயன்படுத்திய 5 பேர் கைது

அந்தியூரில் போதை மாத்திரை பயன்படுத்திய 5 பேர் கைது

அந்தியூர்: அந்தியூர், வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே நேற்று மதியம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்-திற்கு இடமளிக்கும் வகையில், ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரிக்கையில், அந்தியூரில் வசித்து வரும் தேவராஜ், 34, வெள்ளைபிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த அபினேஷ், 20, ஹரிஹரன், 24, இளம்பரிதி, 24, சீதாலட்சுமி தியேட்டர் பகுதியை சேர்ந்த சுரேஷ், 24, என்பதும், இவர்கள் ஐந்து பேரும், பத்து போதை மாத்திரை கொண்ட அட்-டையில், ஆறு மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து, சிரஞ்ச் மூலம் உடலுக்குள் செலுத்தி கொண்டது தெரியவந்தது. ஐந்து பேரையும் அந்தியூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை