மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை: புதுச்சேரி
21-May-2026
கோபி:கோபி நகராட்சி சார்பில், தெரு மற்றும் வளர்ப்பு என மொத்தம் 50 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கடந்த, 5ம் தேதி, கோபி பச்சைமலை ரோட்டில், நான்கு சிறுவர், சிறுமியர் உட்பட ஆறு பேரை, குப்பாண்டவர் வீதியை சேர்ந்த மூதாட்டி வளர்க்கும் நாய் கடித்தது. இதனால் சம்பவம் நடந்த பகுதி உட்பட, பக்கத்து வீதிகளில் உள்ள வளர்ப்பு மற்றும் தெருநாய் என, 55 நாய்களுக்கு மறுநாள் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் நகராட்சி சார்பில், காந்தி நகர், வாய்க்கால்ரோடு, அம்மன் நகர் உள்ளிட்ட வீதிகளில் உள்ள வளர்ப்பு மற்றும் தெருநாய்கள் என, 50 நாய்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.
21-May-2026