உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 5,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

5,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது

ஈரோடு, ஈரோடு மாவட்ட குடிமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு எஸ்.ஐ., மேனகா, பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமாருடன் இணைந்து, கோபியை அடுத்த நயினாம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மாருதி ஆம்னி வேன், பொலிரோ வாகனங்களில் சோதனை செய்தனர். அவற்றில் 5,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.மாருதி வேனை ஓட்டி வந்த கோபி ராம் நகர் அப்துல்லா, 45, அவருடன் இருந்த கோவை, பாப்பநாயக்கன்பாளையம் அபிலாஷ், 35; பொலிரோ வாகனம் ஓட்டி வந்த கோபி கோரமடை நவநீத கிருஷ்ணன், 39, என்பது தெரியவந்தது. மூவரையும் கைது செய்தனர். இதில் அப்துல்லாவின் மனைவி விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் என தெரியவந்தது. மூவரையும் நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை