உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டு எண்ணிக்கை தினத்தில் 560 போலீசார் பாதுகாப்பு

ஓட்டு எண்ணிக்கை தினத்தில் 560 போலீசார் பாதுகாப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. சித்தோடு ஐ.ஆர்.டி.டி., கல்லுாரியில், வரும் 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக ஓட்டு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படவுள்ளது.இதுபற்றி போலீசார் கூறியதாவது: துணை ராணுவ படை வீரர்கள், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார், லோக்கல் போலீசார் மட்டுமின்றி ஊர் காவல் படையினர் 100 என மொத்தம் 560 பேர் ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டு எண்ணும் தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேவை ஏற்பட்டால் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக அழைக்கப்படுவர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி