மேலும் செய்திகள்
குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் 13 அடி உயர்வு
25-Oct-2026
கோபி:பலத்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.கோபி தாலுகா, கொங்கர்பாளையம் கிராமத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை மூலம், 2,498 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நீர்பிடிப்பு பகுதியில், ஜனவரி துவங்கியது முதல், போதிய மழையின்றி, அணையின் முழு கொள்ளளவான, 42 அடியில் கடந்த, 14ல், 19 அடிக்கு மட்டுமே நீர் குட்டையாக தேங்கி நின்றது. இந்நிலையில் கடந்த, 23ல், 21 அடியாக இருந்தபோது, அன்றிரவு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், ஒரே நாளில் 13 அடி உயர்ந்து, 34 அடியாக அதிகரித்தது. இதற்கிடையில் அணை பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 65 மி.மீ., மழை பெய்த சூழலில், அதன் நீர்மட்டம் உயர வில்லை. எந்த நேரத்திலும், அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதால், ஈரோடு கலெக்டர் கந்தசாமி நேற்று காலை ஆய்வு செய்தார்.அதேசமயம், அணை மேல் செல்லும் சாலையில் நடமாட தடை விதித்து, பாதுகாப்பு கேட் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால், சிலர் அத்துமீறி செல்கின்றனர். அவர்களுக்கு வனவிலங்குகளால், ஆபத்து காத்திருக்கிறது.
25-Oct-2026