உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 74 பாக்கெட் சிகரெட் திருட்டு

74 பாக்கெட் சிகரெட் திருட்டு

ஈரோடு, ஈரோடு, பெரிய சேமூர் ஊத்துக்காடு பச்சப்பாளி மேட்டை சேர்ந்தவர் பாலமுருகன், 40. ஈரோடு தண்ணீர் பந்தல்பாளையத்தில் ஜெ.டி. காபி பார் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த, 27ம் தேதி இரவு 11:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் கடையை திறந்த போது, 74 பாக்கெட் சிகரெட், 6,500 ரூபாய் பணம் திருட்டு போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் கடையின் பின்புற கதவை உடைத்து, பணம், சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றது உறுதியானது.வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி