உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 75 ஆயிரம் லட்டு தயாரிப்பு பணி

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 75 ஆயிரம் லட்டு தயாரிப்பு பணி

ஈரோடு, டிச. 27-ஈரோட்டில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, 75 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.ஈரோடு, வ.உ.சி., பூங்காவில் மகாவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு வரும், 30ல் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தியன்று, சுவாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்தாண்டு, கோவில் வார வழிபாட்டு குழு சார்பில், அனுமன் ஜெயந்தியன்று வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, 75 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி நடக்கிறது.இது குறித்து, வார வழிபாட்டு குழு தலைவர் குமார், செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது: கடந்த, 24 மாலை முதல் லட்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில், 38 பெண்கள் உள்ளிட்ட, 50 பேர் பணியாற்றுகின்றனர். 30 அதிகாலை, 4:30 மணி முதல் இரவு கோவில் நடை சாற்றும் வரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும்.லட்டு தயாரிக்க, 2,400 கிலோ சர்க்கரை, 1,300 கிலோ கடலை மாவு, நெய், 60 கிலோ, முந்திரி, 40 கிலோ, திராட்சை, 240 கிலோ, ஏலக்காய் நான்கு கிலோ, எண்ணெய், 800 கிலோ கொண்டு, 75 ஆயிரம் லட்டு தயாரிக்கப்படுகிறது. இதுதவிர பக்தர்களுக்கு ஆரஞ்சு கயிறு வழங்கப்படுகிறது. பொட்டுக்கடலை, கல்கண்டு பிரசாதமாக வழங்கப்படும். மேலும், அனுமன் ஜெயந்தியன்று அன்னதானம் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை