உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புளியம்பட்டி துணை மின் நிலைய பகுதியில் 8 மணி நேர மின்தடை

புளியம்பட்டி துணை மின் நிலைய பகுதியில் 8 மணி நேர மின்தடை

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பொன்னம்பாளையம், காந்திபுரம், வடக்கு காந்திபுரம் பகுதியில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். தற்போது இப்பகுதியில் சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது.பகல் நேரங்களில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரமும், இரவிலும் மின் வெட்டு ஏற்படுகிறது. நேற்று காலை, 10:௦௦ மணி முதல் மாலை, 6:௦௦ மணி வரை 8 மணி நேரம் தொடர்ந்து மின்தடை செய்யப்பட்டது. அறிவிக்கப்படாத மின்தடையால் அனைத்து தரப்பு மக்களும் அவதிக்கு ஆளாகினர். மேலும், சுற்றுவட்டாரத்தில் ஸ்பின்னிங் மில், பனியன் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொன்னம்பாளையம், வடக்கு காந்திபுரம் பகுதியில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால், ஆயில் மாற்றி சர்வீஸ் செய்யும் பணி நடந்தது.இதனால்தான் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. வேறெந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை