மேலும் செய்திகள்
80 கஞ்சா சாக்லெட் பறிமுதல்
07-May-2026
கொடுமுடிகொமுடி பஸ் ஸ்டாண்ட் பின்புறம், கொடுமுடி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, ஈரோடு வெற்றிகோனார்பாளையத்தை சேர்ந்த நித்யானந்தம், 26, என்பவரை கைது செய்தனர்.* ஈரோடு மரப்பாலம் நடராஜா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 27; மரப்பாலம் பழைய நடராஜா தியேட்டர் பின்புறம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அவரை டவுன் போலீசார் கைது செய்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.*ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில் டிரைவர்களின் ஓய்வறை முன்புறம் ஒரு பை கிடந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் சோதனையில், 450 கிராம் எடையில், 80 கஞ்சா சாக்லெட் இருந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
07-May-2026