உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 80 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

80 கஞ்சா சாக்லெட் பறிமுதல்

ஈரோடு, : ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, பழைய ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் பை ஒன்று கிடந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார், பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில், 450 கிராம் மதிப்பிலான, 80 கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை யாரேனும் ரயிலில் கடத்தி வந்திருக்க கூடும் என கருதப்படுகிறது. இதற்கு யாரும் உரிமை கோரவில்லை. ஈரோடு மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை