பட்டாசு கடை அமைக்க 80 பேர் விண்ணப்பம்
ஈரோடு:தீபாவளி பண்டிகை அக்.,20ல் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு கடை அமைக்க தற்காலிக லைசன்ஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று, ஈரோடு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது. தற்போது வரை, 80 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.இதுபற்றி வருவாய் துறையினர் கூறியதாவது: கடந்தாண்டை விட இந்தாண்டு வந்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைவு. பலர் சிவகாசியில் இருந்து நேரடியாகவே பட்டாசு வாங்கி கொள்வதே, தற்காலிக பட்டாசு கடை குறைவதற்கான காரணம். இவ்வாறு கூறினர்.