உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 9 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேருக்கு காப்பு

9 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேருக்கு காப்பு

ஈரோடு:ஈரோட்டில், 9 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மதுவிலக்கு போலீசார், நேற்று முன்தினம் ரயில்வே பார்சல் அலுவலகம் அருகே, ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் திருப்பூர் மாவட்டம் நடுப்பட்டி சொட்ட கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன், 50, பீகார் மாநிலம் சுபால் பகுதியை சேர்ந்த, தற்போது பெருமாநல்லுாரில் வசித்து வரும் சுமித் தத்தி மகன் சகுன்குமார், 22, என்பது தெரியவந்தது. அவர்களை சோதனை செய்தபோது, கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ