உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெறிச்சோடிய ஈரோடு மாநகர கடை வீதி

வெறிச்சோடிய ஈரோடு மாநகர கடை வீதி

ஈரோடு, நவ. 1-தீபாவளி தினமான நேற்று, ஈரோடு கடை வீதி மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஈரோடு மாநகர கடை வீதியில் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக தினமும் குவிந்தனர். இதனால் சாலையோர திடீர் கடைகள் அதிகளவில் காணப்பட்டன. போலீசார் அவ்வப்போது போக்குவரத்தை சில சாலைகளில் தடை செய்தனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, தீபாவளிக்காக பல்வேறு பொருட்களை வாங்கிய பொதுமக்கள் அதன் பின் கடை வீதிகளில் இருந்து கிளம்பினர். இதனால் நேற்று காலை ஈரோடு கடை வீதியான நேதாஜி ரோடு, ஆர்.கே.வி. சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.சிலர் நேற்றும் புத்தாடை வாங்க கடை வீதிக்கு வந்து சென்றனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு பஸ் ஸ்டாண்டில், நேற்று மதியம் கணிசமான அளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஏராளமான பஸ்கள் பயணிகளை ஏற்றி கொண்டு சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ