மேலும் செய்திகள்
இளம்பெண் குளிப்பதை படம் பிடித்தவருக்கு தர்மஅடி
19-Aug-2025
ஈரோடு ஈரோடு மாவட்டம் வெள்ளோடு, உருமாண்டம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. அக்கிராமத்தின், 140 குடும்பத்தார் கோவிலில் வழிபாடு செய்வதுடன், கொத்துக்காரராக மணி, 55, பெரியசாமி பராமரிக்கின்றனர். இங்கு தினசரி பூஜைகள் நடப்பதுடன், கோவிலை புதுப்பித்து கும்பாபி ேஷகம் நடத்த திட்டமிட்டனர். தினசரி பூஜை, கும்பாபிஷேகம் ஊர் மக்கள் சார்பில் பணம் பெற்று செய்கின்றனர். இப்பணத்தில் சீனாபுரம் மலைகோவிலில் நடத்தப்படும் ஏலச்சீட்டில் மாதம், 1 லட்சம் ரூபாய் வீதம், 25 மாதத்துக்கு செலுத்தி வருகின்றனர். இச்சீட்டு போடும் இடத்தை, அதே ஊரை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவர் காண்பித்து பணம் செலுத்துகின்றனர். தவிர தினசரி பூஜைக்கான பண பரிவர்த்தனைகளையும், தெய்வசிகாமணி கவனிக்கிறார்.இந்நிலையில் தினசரி பூஜைக்கான கணக்குகளை ஒப்படைக்க மணி, பெரியசாமி கேட்டும், இதுவரை ஒப்படைக்கவிலலை. இன்னும் இரு மாதத்தில் சீட்டு முடிகிறது. அதற்குள் இம்மாதம் சீட்டு முடித்து, 19 லட்சம் ரூபாயை தெய்வசிகாமணி பெற்று, தன்னுடன் உள்ளோர் பெயரில் சேமிப்பு செய்துள்ளார். இதையறிந்த மணி, ஏற்கனவே உள்ள கணக்கை ஒப்படைப்பதுடன், சீட்டு தொகையை ஒப்படைக்கும்படி கூறியும் தரவில்லை.இந்நிலையில் நேற்று காலை, 10:30 மணி அளவில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு காரில் வந்த மணி, கோவில் கணக்கை ஒப்படைக்காத தெய்வசிகாமணி மீதுள்ள கோபத்தால் தீக்குளிக்க பெட்ரோலும் கொண்டு வந்துள்ளார். இதை அறிந்த போலீசார், அவரை பிடித்து டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் முன்னிலையில் பேசி, 'தற்கொலை செயலில் ஈடுபடக்கூடாது' என்று சமாதானம் செய்தனர். ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, பண பிரச்னைக்கு தீர்வு காண அனுப்பி வைத்தனர்.
19-Aug-2025