மேலும் செய்திகள்
காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
23-May-2025
ஈரோடு :திருப்பூர், ராக்கிபாளையத்தை சேர்ந்த செல்வநாதன் மகள் ஸ்ரீ வித்யா, 17; பெற்றோரை இழந்த நிலையில், தாய் மாமன் ராஜேஷ் கண்ணன் பராமரிப்பில் வளர்ந்தார். பிளஸ் 2 படித்துள்ளார். நஞ்சை ஊத்துக்குளி அருகேயுள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு, தாய்மாமன், அவர் மனைவி ஞானாம்பாள், 4௪, ஆகியோருடன் சிறுமி வந்தார். சுவாமி கும்பிட்ட பின் அப்பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் மூவரும் குளிக்க சென்றனர். ஸ்ரீவித்யாவும், ஞானாம்பாளும் ஆழமான பகுதி என்பதை அறியாமல் ஆற்றில் சிறிது துாரம் சென்று குளித்தபோது இருவரும் நீரில் மூழ்கினர். இதை பார்த்த பரிசல் ஓட்டி ஒருவர், விரைந்து சென்று ஞானாம்பாளை காப்பாற்றினார். ஆனால் ஸ்ரீவித்யா கண்ணிமைக்கும் நேரத்தில் நீரில் மூழ்கி பலியானார். பரிசல்காரர்கள் ஸ்ரீவித்யா உடலை மீட்ட நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
23-May-2025