உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பட்டப்பகலில் சாலையை கடந்து சென்ற சிறுத்தை

பட்டப்பகலில் சாலையை கடந்து சென்ற சிறுத்தை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி செக்போஸ்ட் அருகில், நேற்று மதியம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை சர்வ சாதாரணமாக சாலையை கடந்து சென்றது. அப்போது அவ்வழியே சென்றவர்கள், சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன், மொபைல்போனில் போட்டோ, வீடியோ எடுத்து தள்ளினர். வழக்கமாக இரவில் இரை தேடி சாலையை கடக்கும் புலி, வாகன நடமாட்டம் அதிகமுள்ள சாலையில், பட்டப்பகலில் சாலையை கடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்ணாரி வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ