ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்த அமைச்சர்
ஆவின் நிறுவனத்தில்ஆய்வு செய்த அமைச்சர்பவானி, நவ. 9-சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில், பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று ஆய்வு செய்தார். பால் உற்பத்தியாளர் சங்கம், பால் தொகுப்பு குளிர்விப்பு நிலையம், அதி நவீன பாலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.பின், 21 பால் உற்பத்தியாளர்களுக்கு, 13.86 லட்சம் ரூபாய் மதிப்பில் கறவை மாடு பராமரிப்புக்கு கடனுதவி, 10 பால் உற்பத்தியாளர்களுக்கு, 20 லட்சம் ரூபாயில் கறவை மாடு வங்கி கடனுதவி, ஒரு பால் உற்பத்தியாளருக்கு, 9.40 லட்சம் ரூபாயில் கால்நடை தொழுவம் அமைக்க கடனுதவி என, 36 பேருக்கு, 68.35 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார். பின்னர் நடந்த கூட்டத்தில், பால் கொள்முதல் திறன், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தரமான, துாய்மையான பால், பால் பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும். பால் மற்றும் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்க அமைச்சர் கேட்டு கொண்டார்.