உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாசலில் பொங்கிய பொங்கல்; வாழ்வில் மறையட்டும் இன்னல்

வாசலில் பொங்கிய பொங்கல்; வாழ்வில் மறையட்டும் இன்னல்

ஈரோடு,:ஈரோடு மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் முழுமையாகவும், நகரங்களில் பெரும்பாலான இடங்களிலும் வாசலில் கோலமிட்டு, பொங்கல் வைத்து, உற்சாகத்துடன் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.பொங்கல் பண்டிகைக்காக கடந்த இரண்டு நாட்களாகவே கரும்பு, மஞ்சள் கொத்து, வெல்லம், அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர். நேற்று முன்தினம் இரவில் பெரும்பாலான வீடுகளில் பெண்கள் வண்ண கோலமிட்டனர்.ஈரோடு உட்பட சில இடங்களில் நேற்று முன்தினம் இரவில் மழை பெய்ததால், அதிகாலையில் மீண்டும் கோலமிட்டு, வாசல் பொங்கல் வைத்து கொண்டாடினர். வாசலில் பொங்கல் வைக்க இடமில்லாதவர்கள், வீட்டு அடுப்பில் பொங்கல் வைத்து சூரியபகவான், இயற்கைக்கு படைத்தனர். தொடர் விடுமுறையாக இருந்த போதிலும், பெரும்பாலான வீடுகளில் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி, கரும்பை சுவைத்து மகிழ்ந்தனர்.* ஈரோடு, வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி தினசரி மார்க்கெட்டில், காய்கறி, கனி வணிகர்கள் சங்கம் சார்பில் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடினர். வியாபாரிகள், மக்கள், வணிகர்கள், சுமை துாக்கும் பணியாளர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர். * அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் வீடுகளில் கோலமிட்டு, கரும்பு, மஞ்சள் வைத்து சூரியனை வணங்கி பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை