வாகனங்களை வழி மறித்த ஒற்றை யானை
சத்தியமங்கலம், டிச. 19-சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது தண்ணீர், இரை தேடி விளை நிலங்கள், ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, கேர்மாளம் செல்லும் வழியில் பூத்தாலபுரம் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை, சாலையின் நடுவில் நின்று கொண்டது. அப்போது, அந்த வழியாக வந்தவர்கள் யானையை பார்த்ததும் வாகனங்களை நிறுத்தி கொண்டனர். 20 நிமிடத்திற்கு மேலாக சாலையில் அங்குமிங்கும் உலாவிய பின் யானைவனப்பகுதிக்குள் சென்றது.