குன்றி சாலையில் ஒற்றை யானை நடமாட்டம்
சத்தியமங்கலம், டிச. 26-குன்றி செல்லும் வழியில், ஒற்றை யானை நடமாட்டத்தால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட, கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவ்வப்போது விளை நிலங்களில் புகுந்து பயிர்சேதம் செய்து வருவதும், சாலையில் வரும் வாகனங்களை துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது. குன்றி செல்லும் வழியில் கடந்த இரண்டு நாட்களாக, ஒற்றை யானை சாலையில் உலா வந்தபடி, வாகனங்களை துரத்தி வருகிறது. இதனால் குன்றி செல்லும் வாகனஓட்டிகள் பீதியில் உள்ளனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.