ரூ.9.23 லட்சம் நிதியில் கதிரடிக்கும் களம்
ஈரோடு :மொடக்குறிச்சி தொகுதி கனகபுரம் ஊராட்சி, புதுார் வேலாங்காட்டுவலசு பகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 9.23 லட்சம் ரூபாய் நிதியில், கதிர் அடிக்கும் களம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. பூஜை செய்து எம்.எல்.ஏ., சரஸ்வதி தொடங்கி வைத்தார். பின் விளக்கேத்தி ஊராட்சி ஓலப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பிரிந்து செல்லும் வழியில், 11.41 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.