உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிரெய்லி முறையில் ஓட்டளித்த வாலிபர்

பிரெய்லி முறையில் ஓட்டளித்த வாலிபர்

ஈரோடு, மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குலவிளக்கு மின்னபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம், 31; இரு கண்களும் முழு பார்வையற்றவர். பிரெய்லி முறையில் படித்து பி.எட்., பட்டம் பெற்றவர். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற தீவிரமாக பயின்று வருகிறார். நேற்று சட்டசபை தேர்தலில் குலவிளக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள பொது சேவை மைய ஓட்டுசாவடி மையத்தில் தனது தங்கை உதவியுடன் ஓட்டு போட வந்திருந்தார். அவருக்கு கையால் தடவி பார்த்து வாக்களிக்கும் (பிரெய்லி) அட்டை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் வாக்களித்தார். அதிகாரிகள் அவருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !