உயிர் போகும் வலிக்கு உயிரை தந்த வாலிபர் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை
பவானி, அம்மாபேட்டை அருகே முகாசிபுதுாரை சேர்ந்த தொழிலாளி பழனிச்சாமி மகன் கோகுல், 22; குமராபாளையம் தனியார் கல்லுாரி பி.காம்., இறுதியாண்டு மாணவர். கடந்த சில மாதங்களாக உயிர்நாடியில் வீக்கம் ஏற்பட்டு, அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது. தாங்க முடியாத வலியால் தவித்து வந்தார். நேற்று முன்தினம் தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் 'சில நேரங்களில் எனக்கு வலி அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இந்த முடிவுக்கு வந்தேன். இதுக்கு யாரும் காரணமில்லை. அக்காவுக்கு நல்லபடியாக கல்யாணம் பண்ணி கொடுங்க. தம்பி நீ நல்லா படிச்சு, நம்ம அப்பா, அம்மாவை பத்திரமா பாத்துக்கோ. அக்கா உனக்கு கல்யாணமானால் நான் தான் உனக்கு குழந்தையாக வந்து பிறப்பேன்' என்றும் குறிப்பிட்டிருந்ததாக, அம்மாபேட்டை போலீசார் தெரிவித்தனர்.