உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை விற்பனை விவகாரத்தில் தலைமறைவு கார் டிரைவர் கைது

குழந்தை விற்பனை விவகாரத்தில் தலைமறைவு கார் டிரைவர் கைது

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த குழந்தை விற்கப்பட்ட வழக்கில், தலைமறை-வாக இருந்த கார் டிரைவரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு, கனிராவுத்தர் குளம், மசூதி அருகே வசிப்பவர் நித்யா, 28; இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் திருவையாறு, திருப்பள்ளனம் மேல தெரு. முதல் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறு-பாட்டால், ஈரோடு, மாணிக்கம்பாளையம், முனியப்பன் கோவில் வீதி, கிழக்குகாடு பகுதியில், சந்தோஷ்குமாருடன், 28, என்பவ-ருடன் இரண்டாண்டாக வசித்து வருகிறார். இவர்களுக்கு, 40 நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பெண் குழந்தை பிறந்தது. குழந்-தையை நான்கரை லட்சம் ரூபாய்க்கு விற்றனர். பின்னர் நித்யா மனம் மாறி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம், வீரப்-பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்-விவகாரத்தில் சந்தோஷ்குமார், நித்யா உள்பட ஒன்பது பேரை கைது செய்தனர்.இதில் தலைமறைவாக இருந்த, ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரேவதி என்ற பெண்ணின் கணவரும், கார் டிரைவருமான கணேசனை தேடி வந்தனர். நேற்று அவரை கைது செய்தனர். ஈரோட்டில் கணேசனை நேற்று கைது செய்தனர். இதையடுத்து குழந்தை விற்பனை விவகாரத்தில், கைது எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை