உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

ஈரோட்டில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

ஈரோடு, நம்பியூரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் நேற்று காலை, 9:20 மணியளவில் பெருந்துறை சாலையில் வந்து கொண்டிருந்தது. ஹூண்டாய் ஷோரூம் பிரிவு அருகே வந்த போது, செல்வம் நகர் செல்ல முயன்றது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த டஸ்டர் கார், சுசூகி கார் மீது மோதியது. இதில் டஸ்டர் கார் முன் நோக்கி சென்று எதிர் திசையில் வந்த, தனியார் கல்லுாரி பஸ் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கு உள்ளான நான்கு வாகனங்களும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ