காங்கேயத்தில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
காங்கேயத்தில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்காங்கேயம், அக். 23-காங்கேயம் சட்டசபை தொகுதி, காங்கேயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான செயல் வீரர் கூட்டம், காங்கேயத்தில் நேற்று நடந்தது.ஒன்றிய செயலாளர் நடராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.