இனிப்பு வழங்கி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கொண்டாட்டம்
இனிப்பு வழங்கி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கொண்டாட்டம்புன்செய்புளியம்பட்டி, அக். 18--அ.தி.மு.க.,வின், 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க., சார்பில், புன்செய்புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ., பண்ணாரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் நிர்வாகிகள், தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.விழாவையொட்டி பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட சத்தி, பவானிசாகர் ஒன்றியத்தில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட விவசாய பிரிவு அணி நிர்வாகி சோமசுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.