மேலும் செய்திகள்
மாணவியரிடம் அத்துமீறினால் இனி ஆசிரியர் வேலை காலி
27-Nov-2024
தினமும் நாளிதழ் படியுங்க' மாணவியருக்கு அறிவுரைடி.என்.பாளையம், நவ. 29--பங்களாப்புதுார் போலீஸ் சார்பில், டி.என்.பாளையம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தமிழரசி தலைமை வகித்தார்.போதை பொருள்களால் ஏற்படும் தீமை, மொபைல்போன்களால் ஏற்படும் சிக்கல் குறித்து, இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, எஸ்.எஸ்.ஐ.,க்கள் குமரேசன், பழனிச்சாமி பேசினர். ஆன்லைன் மோகத்தால் நாளிதழ் படிக்கும் பழக்கம் குறைகிறது. அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல்களை பெற மாணவ-மாணவியர் தினமும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என்று, போலீசாருக்கு மாணவியர் நன்றி தெரிவித்தனர்.
27-Nov-2024