எஸ்.ஐ.ஆருக்கு பின் 2,56,967 வாக்காளர் குறைவு ஈரோடு மேற்கு தொகுதியில் 58,771 பேர் மாயம்
ஈரோடு: எஸ்.ஐ.ஆர்., பணியில் சேர்த்தல், நீக்குதல் போக, இறுதி பட்டியல் படி ஈரோடு மாவட்டத்தில், எட்டு தொகுதிகளில், 2.57 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் கடந்தாண்டு அக்.,27க்கு முன், 19 லட்சத்து, 97,189 வாக்காளர் இருந்தனர்.எஸ்.ஐ.ஆர்., பணியின் ஒரு பகுதியாக கடந்த டிச.,19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது, மூன்று லட்சத்து, 25,429 பேர் நீக்கப்பட்டு, 16 லட்சத்து, 71,760 பேர் இடம் பெற்றனர். அதை தொடர்ந்தும் விடுபட்ட, புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், நீக்கப்பணி நடந்து, நேற்று முன்தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில், 68,462 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, நீக்கம், திருத்தம் மேற்கொண்டு, 17 லட்சத்து, 40,574 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த அக்., 27ஐ ஒப்பிடுகையில், 2 லட்சத்து, 56,967 வாக்காளர் குறைந்துள்ளனர்.