அக்னி வீர் ஆட்சேர்ப்பு முகாம் தொடங்கியது செப்., 7ம் தேதி வரை நடக்கிறது
ஈரோடு, ஈரோட்டில் வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில், இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் நேற்று துவங்கியது. கலெக்டர் கந்தசாமி துவங்கி வைத்தார்.கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை மற்றும் தேனி என, 11 மாவட்டங்களிலிருந்து அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்ஸடோரி கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (10-ம் வகுப்பு தேர்ச்சி ), அக்னிவீர் டிரேட்ஸ்மேன் (8-ம் வகுப்பு தேர்ச்சி) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.மத்திய வகைகள் சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிபாய் பார்மா, ஹவில்தார் (கல்வி), ஹவில்தார் (சர்வேயர் தானியங்கி வரைபடவியலாளர்), மத ஆசிரியர் ஜூனியர் கமிஷன் அதிகாரி, ஜூனியர் கமிஷன் அதிகாரி (கேட்டரிங்) தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்படவுள்ளனர்.முகாமை தொடங்கி வைத்த கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:இந்த முகாம் செப்.,7 வரை நடைபெறவுள்ளது. ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் பணிகளை, 15 நாட்களில் செய்ததில் உண்மையில் மகிழ்ச்சி அடைகிறோம்.பல்வேறு துறை அலுவலர்களும், ராணுவ அலுவலர்களும் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (பொது) (சென்னை மண்டலம்) அஸ்வதி, ஆட்சேர்ப்பு இயக்குநர்கள் அன்சுல் வர்மா, சுனில் யாதவ், ராஜட் ஸ்வர்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.