உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது பறிமுதல்; 2 பேர் கைது

மது பறிமுதல்; 2 பேர் கைது

சத்தியமங்கலம்:தாளவாடி போலீசார் பனஹள்ளி பகுதியில் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை விற்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதேபகுதியை சேர்ந்த சாந்த மல்லு, 40, என தெரிந்தது. அவரை கைது செய்து, 22 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.* சத்தியமங்கலம் எஸ்.எஸ்.ஐ., மெகதா பேகம் தலைமையிலான போலீசார், சத்தி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரித்தனர். பவானிசாகர் அருகேயுள்ள கரிதொட்டம் பாளையத்தை சேர்ந்த சங்கீதப்ரியா, 28, என தெரிந்தது. சாக்குப்படையில் ஆறு கிலோ குட்கா இருந்தது. கர்நாடக மாநிலம் புளிஞ்சூரிலிருந்து வாங்கி வந்ததாக கூறினார். அவரை கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.*அந்தியூர் அருகேயுள்ள செம்புளிச்சாம்பாளையத்தில், அந்தியூர் எஸ்.ஐ., செபாஸ்டியான் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அங்கு மது விற்றுக் கொண்டிருந்த ஆண்டியப்பன், 66, என்பவரை கைது செய்து, 25 மது பாட்டிலை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !