உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மது குடிக்க போனவர் மாயம்

மது குடிக்க போனவர் மாயம்

ஈரோடு:பர்கூர்மலை தாமரைக்கரை பர்கூர் மடம் பகுதியை சேர்ந்தவர் சித்தன், 30; ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒரு விவசாய பண்ணையில் மூன்றாண்டாக வேலை செய்தார். கடந்த, 16ம் தேதி இரவு மது குடித்து விட்டு வருவதாக பண்ணையில் இருப்பவர்களிடம் கூறி பைக்கில் சென்றவர், பின்னர் திரும்பவில்லை. பி.பெ.அக்ரஹாரம் ஒயின்ஷாப்பில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு படுத்து கொண்டார். பார் ஊழியர்கள் பைக், சித்தனின் மொபைல் போனை மீட்டு கொடுத்தனர். ஆனால் சித்தனை காணவில்லை. புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !