சாலையில் நிற்கும் ஆம்புலன்ஸ் போக்குவரத்துக்கு இடையூறு
ஈரோடு, ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே உள்ள, டென்னிஸ் கிளப் சாலையில், அரசு உதவி பெறும் பள்ளி, மின்வாரிய அலுவலகம், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், சாலையின் ஒரு புறத்தில் தனியார் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்படுகின்றன. மறுபுறம் இரண்டு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் வாகனத்தை நிறுத்தி செல்வதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அந்த சாலை வழியாக, அவசர தேவைக்காக செல்வோர், போதிய இடவசதி இல்லாமல் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அப்பகுதிகளில் நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.