உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மா உணவகங்கள் தடையின்றி செயல்படும்

அம்மா உணவகங்கள் தடையின்றி செயல்படும்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், 11 இடங்களில் அம்மா உண-வகம் செயல்படுகிறது. தற்போது காஸ் தட்டுப்பாடு நிலவும் நிலையில், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படுமா? என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அம்மா உணவகங்களுக்கு தேவை-யான சிலிண்டர்கள் வழங்கப்படுவதால், தடையின்றி செயல்-படும் என்று மாநகர நல அலுலவர் கவுரி சரவணன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:ஒரு அம்மா உணவகத்துக்கு மாதத்துக்கு, 17 சிலிண்டர் தேவைப்படும். இம்மாதத்தில் இன்று (நேற்று) வரை, 12 சிலிண்டர் வந்துள்ளது. அடுத்த வாரத்தில் மீதி, ஐந்து சிலிண்டர்-களும் வந்துவிடும். இதனால் அம்மா உணவகம் பாதிப்பின்றி தொடர்ந்து செயல்படும். தடை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை