உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீக்குளித்த முதியவர் பலி; தகவல் தர அழைப்பு

தீக்குளித்த முதியவர் பலி; தகவல் தர அழைப்பு

ஈரோடு: பெருந்துறையில் குன்னத்துார் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில், புதிதாக கட்டி வரும் பிள்ளையார் கோவில் அருகே, 60 வயது மதிக்கதக்க ஆண், கடந்த, ௩ம் தேதி இரவு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். கோவில் வாட்ச்மேன், பூசாரிகள் தீயை அணைக்க முற்பட்டும் தீ பரவி எரிந்து இறந்து விட்டார். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, கையில் ஆர்.எம்.கே.வி துணிப்பை வைத்திருந்தார். இறந்த முதியவர் குறித்து தகவல் அறிந்தவர்கள், பெருந்துறை போலீசை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ