உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அங்கன்வாடி ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்

கொடுமுடி, நவ. 15-அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொடுமுடியில் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுமுடி ஒன்றிய தலைவர் வேலுமணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுதா, பொருளாளர் தமிழ்செல்வி முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி திட்டத்துக்கான நிதியை, மத்திய அரசு குறைக்க கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க செலவு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். உணவு சமைக்க தேவையான பாத்திரங்களை அரசே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ