மேலும் செய்திகள்
சத்துணவு - அங்கன்வாடி ஊழியர் தொடர் தர்ணா
13-Feb-2026
ஈரோடு: தமிழக சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நுாதனமான முறையில் போராட்டம் நடத்தினர். அதில், அரசின் செவிகளில் விழுவதற்கான ஓசை எழுப்பும் வகையில், சாப்பாட்டு தட்டின் பின்புறம் குச்சியால் அடித்து, ஒலி எழுப்பி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமையில் பலர் பங்கேற்றனர்.
13-Feb-2026