உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சோழீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

சோழீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா

ஈரோடு, ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, ஈரோடு காவிரி கரையோரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கோவில் பிரகாரத்தில் உள்ள வில்வேஸ்வரர், புஷ்பநாயகிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் சோழீஸ்வரருக்கு, 100 கிலோவில் அரிசி சாதம் மற்றும் காய்கறிகளால் அன்னாபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின், பக்தர்களுக்கு அன்ன விசர்ஜனம், பிரசாத வினியோகம், பிரசாத அன்னம் ஆற்றில் கரைப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கோட்டை ஈஸ்வரன் கோவில், நட்டாற்றீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.* கோபி பச்சைமலை முருகன் கோவிலில் வீற்றிருக்கும் மரகதீஸ்வரருக்கு அன்னாபிேஷக விழா நடந்தது. பல்வேறு காய், கனிகளை கொண்டு மரகதீஸ்வரருக்கு அன்ன அலங்காரம் செய்யப்பட்டது. பவளமலையில் குடி கொண்டிருக்கும், பெரியநாயகி உடனமர் கைலாச நாதருக்கும், பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலிலும் அன்னாபிேஷக விழா நடந்தது.-------*சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவில், பழமையான மேற்கு பார்த்த பிரம்மன் பூஜித்த தலமான பிரமலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிேஷகம் நடந்தது. கைலாசநாதருக்கு 25 கிலோ அரிசி, 20 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.இதேபோல் ஈரோடு, பவானி மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிேஷக விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை