உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அண்ணாதுரை நினைவு தினம்

அண்ணாதுரை நினைவு தினம்

பெருந்துறை,: பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரையின், 56வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை-யொட்டி பெருந்துறை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து கட்சி-யினர் ஊர்வலமாக சென்று, பெருந்துறையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் கருப்பணன் தலைமை வகித்தார். பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுதுரை, பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், ரஞ்சித் ராஜ், நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழ-னிசாமி, சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ