18வது சுற்றுலா தலமாகும் அரசு அருங்காட்சி-யகம் விரைவில் வெளியாகிறது அறிவிப்பு
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா அருகில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், பண்டைய கால கல்வெட்-டுக்கள், சிலைகள், முதுமக்கள் தாழி, பட்டயங்கள் என பல்வேறு பொருட்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மட்டு-மின்றி வெளி மாவட்ட, மாநில மக்களும் அருங்-காட்சியகத்திற்கு வந்து, வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர். இதேபோல் தொல்லியல் துறை மற்றும் வர-லாற்று துறை மாணவர்களுக்கு, இங்கு தேவை-யான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நி-லையில் அருங்காட்சியகத்தை ஈரோடு மாவட்-டத்தின், 18வது சுற்றுலா தலமாக அறிவிக்க சுற்-றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகா-ரிகள் கூறியதாவது:ஏற்கெனவே ஈரோடு மாவட்டத்தில் கொடிவேரி, பவானிசாகர் அணை, ஈ.வெ.ரா., நினைவகம் உள்-பட, 17 இடங்கள் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்-டுள்ளது. இந்த வரிசையில் ஈரோடு அரசு அருங்-காட்சியகத்தையும் சுற்றுலா தலமாக அறிவிக்க மாவட்ட நிர்வாகம் சுற்றுலா துறைக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு கூறினர்.இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் கூறுகையில், 'அரசு அருங்காட்சிய-கத்தை சுற்றுத்தலமாக மாற்றும் நடவடிக்கைக்-காக, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விரைவில் மாவட்டத்தின், 18வது சுற்றுலா தல-மாக அரசு அருங்காட்சியகம் அறிவிக்க வாய்ப்-புள்ளது' என்றார்.