மேலும் செய்திகள்
பேக்கரியில் 'குட்கா' விற்றவருக்கு காப்பு
25-Jun-2025
ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டிவலசு அணைக்கட்டு, முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் அருகே ஆவின் பூத் செயல்படுகிறது. ரயில்வே துறை ஓய்வூதியர்கள் நிர்வாகம் செய்கின்றனர். நேற்று காலை பூத்துக்கு சென்றபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. கல்லா பெட்டியில் இருந்த, 10,500 ரூபாய், மிக்சர், சாக்லேட் உட்பட தின்பண்டம் திருட்டு போனது தெரிந்தது. பூத்தின் ஒரு பகுதியான இரும்பு தகரத்தை கம்பியால் குத்தி உள்ளே புகுந்துள்ளனர். புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இதே பூத்தில் சில ஆண்டுக்கு முன் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது.
25-Jun-2025