அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர் திருவிழா இன்று துவக்கம்
அந்தியூர்: அந்தியூர் குருநாதசுவாமி கோவில் ஆடி தேர்திருவிழா இன்று காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி புதுப்பா-ளையம் மடப்பள்ளியிலிருந்து காமாட்சியம்மன், பெருமாள் மற்றும் குருநாதசுவாமி ஒன்றன்பின் ஒன்றாக, 3 கி.மீ., துாரத்தில் உள்ள வனகோவிலுக்கு, பக்தர்களால் சுமந்து செல்லப்படும். செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். அங்கு விடிய விடிய சிறப்பு பூஜை நடக்கும்.நாளை அதிகாலை மீண்டும் மடப்பள்ளி கொண்டு வரப்படும். இதைத் தொடர்ந்து, 17ம் தேதி வரை மூன்று சுவாமிகளுக்கும் அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை நடக்கும். கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, மேற்கு மண்டல ஐ.ஜி., சசிமோகன் நேற்று ஆய்வு செய்தார்.