உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

காங்கேயம், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, வெள்ளகோவில் நகராட்சியில், கமிஷனர் மனோகரன் தலைமையில், குழந்தை தொழிலாளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நேற்று நடந்தது. குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன். பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலும் அகற்ற சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்று, நகராட்சி அலுவலக ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.இதேபோல் தாராபுரத்தில் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி தலைமையில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர். ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை