தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூட்டம்
ஈரோடு: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு கூட்டம், மாநில தலைவர் செல்லக்கண்ணு தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாநில சிறப்பு தலைவர் மகேந்திரன், மாநில பொது செயலாளர் சாமுவேல்ராஜ், பொருளாளர் மோகனா உட்பட பலர் பேசினர்.பெருந்துறை தாலுகா ஈங்கூர், திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதி பட்டியலின மக்களுக்கான சிப்காட் வளாகத்தில் கட்டப்பட்ட தொழில் கூடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஈங்கூரில் தாட்கோவுக்கு சொந்தமான, 48 ஏக்கர் காலி இடத்தை தனியாருக்கு வழங்கி உள்ளதை ரத்து செய்து, பட்டியலின மக்களக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பஞ்.,களில் சமத்துவ மயானம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர். ஈரோடு மாவட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.