உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / படிப்பில் சேர பதற்றம்: மாணவர் விபரீதம்

படிப்பில் சேர பதற்றம்: மாணவர் விபரீதம்

ஈரோடு:கோபி சிறுவலுாரை சேர்ந்த அருணாசலம் மகன் நிஷாந்த், 18; பெருந்துறை தோரணவாவி பழைய தொட்டி பாளையத்தில் வசிக்கின்றனர். பிளஸ் 2வில் 570 மதிப்பெண்களை நிஷாந்த் பெற்றார். இன்ஜினியரிங், கால்நடை படிப்புக்கு விண்ணப்பித்துள்ளார். எந்த கல்லுாரியில் இடம் கிடைக்குமோ என்று பெற்றோரிடம் நிஷாந்த் புலம்பியுள்ளார். அருணாசலம் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். மனைவி கற்பகம், மகள் பிரதீபா வெளியே சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த நிஷாந்த் துாக்கிட்டு கொண்டார். வீட்டுக்கு வந்த கற்பகம் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நிஷாந்த்தை இறக்கி, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவ பரிசோதனைையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை