மேலும் செய்திகள்
அத்துமீறும் குடிமகன்களால் மக்கள் அச்சம்
27-Jan-2026
ஈரோடு: ஈரோடு பெரியார் நகரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்-பாட்டுவாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கட்டி பல ஆண்டுகளான நிலையில் குடியிருப்புகள் சேதமடைந்து விட்-டன. இதனால் இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட அரசு முடிவு செய்தது. இங்குள்ள அனைவரும் காலி செய்யப்பட்ட நிலையில் இடிக்கும் பணியை தொடங்கவில்லை. இதனால் அடுக்குமாடி குடியிருப்-புகள், சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறிவிட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: அடுக்குமாடி குடியி-ருப்புகள் காலியாக உள்ளதால், பகல் மற்றும் இரவு நேரங்களில் குடிமகன்கள், மது குடிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்-றனர். இரவில் என்ன நடக்கிறதோ தெரியவில்லை. அசம்பாவித சம்பவம் நிகழும் முன், குடியிருப்புகளை இடித்து அகற்ற நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
27-Jan-2026