ஜெப வீட்டை திறக்க அனுமதி கோரி முறையீடு
ஈரோடு, கொடுமுடி, எஸ்.என்.பி., நகர் புகழ் உட்பட சிலர், ஈரோடு ககெல்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: கொடுமுடியில் ரகுபதி என்பவருக்கு சொந்தமான இடத்தில், அனுமதி பெற்று, 2023 முதல் வாடகை ஒப்பந்த அடிப்படையில், ஜெப வீடு நடத்தி வந்தோம். இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர், சட்ட விரோதமாக ஜெபக்கூட்டம் நடத்துவதாக புகார் கூறியதால், வருவாய் துறையி னர் மற்றும் போலீசார், ஜெபவீட்டுக்கு சீல் வைத்தனர். ஜெபக்கூடத்துக்கு அருகே வேறு வீடுகள் இல்லை. பொய் புகாரின் பேரில் மூடப்பட்ட ஜெபவீட்டை மீண்டும் திறந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.