உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேலை வாய்ப்பு முகாமில் 918 பேருக்கு நியமன ஆணை

வேலை வாய்ப்பு முகாமில் 918 பேருக்கு நியமன ஆணை

ஈரோடு :ஈரோடு மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் பணி நியமன ஆணை வழங்கி, கலெக்டர் கந்தசாமி பேசினார். முகாமில், 185 தனியார் துறை நிறுவனங்கள், 3,365 வேலை நாடுனர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட, 918 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிகழ்வில் வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் ராதிகா, மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !