அரங்கநாதர் கோவிலில் 5ல் தேர்திருவிழா தொடக்கம்
அரங்கநாதர் கோவிலில்5ல் தேர்திருவிழா தொடக்கம்ஈரோடு, செப். 27-ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், நடப்பாண்டு பிரம்மோத்சவ தேர்த்திருவிழா, அக்.,௫ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்குகிறது. தினசரி யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடக்கும். ஒவ்வொரு நாளும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலாநடக்கிறது. 11ம் தேதி மாலை திருக்கல்யாண உத்சவம் நடக்கிறது. விழா முக்கிய நிகழ்வான தேரோட்டம், 12ம் தேதி காலை, 8:40 மணிக்கு நடக்கிறது.