உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் வரும் 7ல் பக்ரீத் தொழுகைக்கு ஏற்பாடு

ஈரோட்டில் வரும் 7ல் பக்ரீத் தொழுகைக்கு ஏற்பாடு

ஈரோடு, ஈரோடு மாவட்ட, அரசு தலைமை ஹாஜி முகமது கிபாயத்துல்லா வெளியிட்ட அறிக்கை: ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில், தியாக திருநாள் பக்ரீத் சிறப்பு தொழுகை வரும், 7ம் தேதி காலை, 9:30 மணிக்கு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் நடக்க உள்ளது. அதற்கு முன்பு, 9:00 மணிக்கு தொழுகையின் விபரம் சொல்லப்படும். அதன் பின் பக்ரீத் பெருநாள் கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்து சொற்பொழிவாற்றப்படும். சரியாக, 9:30 மணிக்கு தொழுகை ஆரம்பமாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை